கனமழை எச்சரிக்கையால் விவசாயிகள்... கலக்கம்; பயிர்கள் அழுகும் அபாயம்
Added : டிச 07, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவைவிட அதிகம் பெய்து நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து கிடைத்தது.

அணை, ஏரி, குளம் நிறைந்ததால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழித்துள்ளது.

குறிப்பாக சம்பா பருவ நெல் அதிக பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கரும்பு, மரவள்ளி, மஞ்சள் உள்ளிட்ட நன்செய் பயிர்களும்; பருத்தி, மக்காச்சோளம், உளுந்து உள்ளிட்ட மானாவரி பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை கடந்த அக்டோபர் மாத இறுதியில் துவங்கி பெய்து வருகிறது.

ஏற்கனவே, தென் மேற்கு பருவ மழையில் இப்பகுதியில் போதிய மழை பெய்துள்ள நிலையில், இனி கன மழை பெய்தால் பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்நிலையில் மாவட்டத்தில் நெல், மக்காச்சோளம் பயிர்கள் கதிர்விடும் தருவாயில் உள்ளதுடன், பருத்தி செடிகளில் காய்கள் வெடித்து பஞ்சு வெளியாகி அறுவடைக்கு தயாராகி வருகிறது.

உளுந்து செடிகளில் காய் பிடித்து முற்றும் தருவாயில் உள்ளது. கனமழை பெய்தால் பயிர்கள் அழுகி, மகசூல் பாதிக்கும்.இந்நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி, தமிழகத்தில் கரையை கடக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாகும் புயலுக்கு 'மாண்டஸ்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தமிழகத்தில் கன மழையை கொடுக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை வரை செய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது விவசாயிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரு வாரமாக மழை பெய்யாமல் இருப்பதால் மகசூல் அதிகம் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

இச்சூழ்நிலையில் கனமழை எச்சரிக்கை விவசாயிகளிடம் கவலையை அதிகரித்துள்ளது.

கனமழை பெய்து விளை நிலங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

வேளாண் துறை அதிகாரிகளும் கன மழையால் பயிர்கள் பாதிப்பதை தவிர்க்க விவசாயிகளுக்கு தக்க ஆலோசனை வழங்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X