மது அருந்தும் பார் ஆனது மேம்பாலம் பள்ளி மாணவிகள், பொதுமக்கள் அச்சம்
Added : டிச 07, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



திருவெண்ணெய்நல்லுார் : திருவணெ்ணெய்நல்லுார் மலட்டாறு மேம்பாலத்தில் மது அருந்தும் குடிமகன்களால் மாணவிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருவெண்ணெய்நல்லுார் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. அதன் பின் மலட்டாறு அருகே உள்ள அரசு இடம் தேர்வு செய்யப்பட்டு, 3.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு கடந்த 8 மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது.

தாலுகா அலுவலகம் உள்ள பகுதியில் பஸ் வசதி இல்லாததால், பெரும்பாலான அரசு ஊழியர்கள், பொதுமக்கள், மாதிரி பள்ளி மாணவர்கள், ஏமப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் என தினமும் கள்ளுக்கடை சந்திப்பிற்கு வந்து பஸ் ஏறிச் செல்லும் நிலை உள்ளது.

இந்நிலையில் தாலுகா அலுவலகத்திலிருந்து கள்ளுக்கடை சந்திப்பு வரை சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் 500 மீட்டர் துாரம் இருள் சூழந்து காணப்படுகிறது.

இதனை மது பிரியர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, மலட்டாறு மேம்பாலத்தை தற்போது பாராகவே மாற்றி விட்டனர். தினமும் மாலை நேரங்களில் பாலத்தில் அமர்ந்து மது அருந்துவதும், போதை தலைக்கேறிய நிலையில் அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவிகளை கிண்டல் செய்து, ஆபாசமாக பேசுவதும், அவர்கள் செல்லும் சைக்கிளை பிடித்து இழுப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து புகார்கள் சென்றும் போலீசார் கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் பள்ளி மாணவிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதோடு, மாலை நேரங்களில் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

எனவே தாலுகா அலுவலகத்திலிருந்து கள்ளுக்கடை சந்திப்பு வரை மின் விளக்குகள் அமைப்பதுடன், அப்பகுதியில் மது பிரியர்கள் மது அருந்துவதைத் தடுத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
07-டிச-202220:51:42 IST Report Abuse
Krishnamurthy Venkatesan அடுத்து வரும் ஆட்சியும் மது கடைகளை மூடாது. இதுதான் உண்மை.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
07-டிச-202219:46:41 IST Report Abuse
r.sundaram அரசே மது விற்கும் போது, போலீஸ் அதற்க்கு எதிராக நடவடிக்கை எடுக்குமா என்ன? அரசு செயல்படுவதே டாஸ்மாக் வருமானத்தை வைத்துத்தான். ஆதலால் பொதுமக்கள்தான் பார்த்து நடந்துகொள்ள வேண்டும். திமுகவுக்கு ஓட்டுப்போட்டீர்கள் அல்லவா, அதன் பலன் இதுதான், இன்னும் மூன்றரை வருடங்கள் அனுபவித்துத்தான் தீர வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X