சிறுபாக்கம் : சிறுபாக்கம் பகுதிகளில் மாடுகளை அம்மை நோய் தாக்குவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சிறுபாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது.
கடந்த சில நாட்களாக, சிறுபாக்கம், வள்ளிமதுரம், புதூர், குடிகாடு பகுதிகளில், பசு மற்றும் காளை மாடுகளுக்கு அம்மை நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால், மாடுகள் காய்ச்சல், சளி, மூச்சுத் திணறல், தீவனம் உண்ணாமல் இருத்தல் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, சிறுபாக்கம் பகுதிகளில் மாடுகளுக்கு அம்மை நோய் தாக்குதலை தடுக்க, சிறப்பு முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.