மதுராந்தகம், : மதுராந்தகத்தில் வட்டார அளவில் நடைபெற்ற கலை திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, நேற்று, பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
மதுராந்தகம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் கலைத்திருவிழா கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வந்தது.
இதில் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பு வரையிலான மாணவர்களிடையே, நடனம், பேச்சு, கவிதை, வரலாற்று நாடகம், கட்டுரை, ஓவியம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.
இறுதியில், போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு மதுராந்தகம் எம்.எல்.ஏ., மரகதம், நகர மன்ற தலைவர் மலர்விழி பங்கேற்று பரிசு பொருட்களை வழங்கினர். இந்நிகழ்வில், நகராட்சி பிரதிநிதிகள், வட்டார கல்வி அலுவலர், ஆசிரியர் பயிற்றுனர்கள், பள்ளிஆசிரியர்கள் பங்கேற்றனர்.