கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க.,வினர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, அஞ்சலி செலுத்தினர்.
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, அம்பேத்கர் உருவ படத்திற்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தினார்.
மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் அரவிந்தன், அன்புமணிமாறன், ஒன்றிய அவை தலைவர் ரவிக்குமார், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கலா, ஒன்றிய துணை செயலாளர் சுதா, நிர்வாகிகள் கொளஞ்சி, முருகன், மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.