மதுராந்தகம், : மதுராந்தகம், அச்சிறுபாக்கம், வையாவூர், மெய்யூர், ராமாபுரம், எலப்பாக்கம், எல்.எண்டத்தூர், ஒரத்தி என, விவசாயமே பிரதானமாக நிறைந்த பகுதியாகும்.
விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பண பலன் தரக்கூடிய வகையிலான மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து மதுராந்தகம் வேளாண் உதவி இயக்குனர் கேசவன் கூறியதாவது:
கிராமங்களில் விவசாயிகள் வரப்பு ஓரங்களில் மாற்று பயிராக மரக்கன்றுகள் நடவு செய்து பயன்பெறும் வகையில், விலை உயர்ந்த மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதற்கு தேவையான ஆவணங்களாக, ஆதார் அட்டை நகல், நிலத்தின் அடங்கல், வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவற்றுடன் வேளாண் அலுவலகத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
குமிழ் தேக்கு, செம்மரம், மகோகனி, வேங்கை, பூவரசம் முதலிய மரக்கன்றுகள் இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது,
இவ்வாறு அவர் கூறினார்.