சிதம்பரம : சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவிலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
சிதம்பரம் வண்டிகேட்டில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அவைத்தலைவர் குமார் தலைமையில், சிதம்பரம் நகர துணை செயலாளர் அரிசக்திவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிர்வாகிகள் அருள், டேங்க் சண்முகம், தில்லை கோபி, சுரேஷ்பாபு, செல்வம், பாலகிருஷ்ணன் மற்றும் மார்க்கெட் நாகராஜ், புவனேஸ்வரி, பழனிசாமி, கருப்பு ராஜா, மருது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, ஊனமுற்றோர் பள்ளியில் அன்னதானம் வழங்கப்பட்டது.
காட்டுமன்னார்கோவிலில் நடந்த நிகழ்விற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் வாசு முருகையன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் எம்.ஜி.ஆர்., தாசன் வரவேற்றார்.
ஜெ., படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் பாலசந்தர், தோத்தாத்திரி, விஸ்வலிங்கம், ஜான்போஸ்கோ, ரவிச்சந்திரன், அசோகன், வசந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.