செஞ்சி : திண்டிவனத்தில் 10ம் தேதி விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நடக்கிறது
இதுகுறித்து மாவட்ட செயலாளர், அமைச்சர் மஸ்தான் அறிக்கை:
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் சேகர் தலைமையில் வரும் 10ம் தேதி காலை 10:00 மணிக்கு திண்டிவனம் ஹோட்டல் ஆர்யாஸ் மினி ஹாலில் நடக்கிறது.
கூட்டத்தில், மாநில, மாவட்ட, நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு, உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், அனைத்து அணி அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.