திருக்கழுக்குன்றம் ; திருக்கழுக்குன்றம் அடுத்த, எடையூர் பகுதியில், பிடாரி செல்லியம்மன் கோவில் உள்ளது. தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறையின், ஒரு கால வழிபாட்டிற்குரியது. பக்தர்கள் உபயமாக அளித்த நகைகளை, கோவிலை நிர்வகிக்கும் பிரமுகர்கள், கோவிலில் பாதுகாத்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை, கோவில் பூட்டை உடைத்து, கதவை பெயர்க்கப்பட்டதை இப்பகுதியினர் கண்டு, கோவிலுக்குள் சென்று கவனித்தனர்.
பீரோவில் வைத்திருந்த நகைகளை, மர்ம நபர்கள் கொள்ளையடித்தது தெரிந்தது. 30 சவரத்திற்கும் மேல் நகைகள் கொள்ளை போயிருக்கலாம் என, தெரிகிறது.
மேலும், உண்டியலை உடைத்து, 10 ஆயிரம் ரூபாய் வரை, பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அப்பகுதியினர், நகை ஆவண ரசீது அடிப்படையில், சில சவரன் நகைகள் கொள்ளை போனதாக, திருக்கழுக்குன்றம் போலீசில் புகார் அளித்தனர். அத்துறைஆய்வாளர் பாஸ்கரனும், புகார் அளித்தார்.