கிள்ளை : பிச்சாவரம் ஊராட்சியில் கதிரடிக்கும் களம் அமைக்க, பூமி பூஜை விழா நடந்தது.
கிள்ளை அடுத்த பிச்சாவரம் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ. 5.75 லட்சம் மதிப்பில், கதிரடிக்கும் களம் அமைக்க பூமி பூஜை விழா நடந்தது. தி.மு.க., பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய செயலர் கலையரசன், தலைமை தாங்கி பணிகளை துவக்கி வைத்தார்.
ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தி சாமிதுரை, மாணவரணி அமைப்பாளர் பார்த்திபன், நிர்வாகிகள் அருள், கோவிந்தராஜ், விஜயகுமார், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.