செங்கல்பட்டு : சென்னை, பெரவள்ளுர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 45. இவர், செங்கல்பட்டு புறவழிச் சாலையில், கூலி வேலை செய்து வந்தார். அப்போது, அவரை, வழிமறித்த ஒரு வாலிபர் பணம் கேட்டு, கொலை செய்து விடுவதாக, நேற்று முன்தினம், மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து, செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, செங்கல்பட்டு ரவுடி அன்வர், 28, என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு மாவட்ட சிறையில், போலீசார், நேற்று, அடைத்தனர்.