கிள்ளை, : கிள்ளை அடுத்த கீழச்சாவடி கிராமத்தில் உள்ள பாம்பாளம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற, பாண்டியன் எம்.எல்.ஏ., மற்றும் அகஸ்தியம் பவுண்டேஷன் நிறுவனர் ஈஸ்வர் ராஜலிங்கம் ஆகியோருக்கு, கிராம நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவில், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலர் ராசாங்கம், மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், கூட்டுறவு வங்கி தலைவர்கள் வசந்த், வேணுகோபால், ஒன்றிய அவைத் தலைவர் ரெங்கசாமி, கிள்ளை நகர செயலர் தமிழரசன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்த ஜோதி சுதாகர், ரவி, மாவட்ட தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் சுவாமிநாதன், நிர்வாகிகள், அன்பு ஜீவா, நடேசன் ஜெயராமன், பாலையா, ஆதிமூலம் உட்பட பலர் பங்கேற்றனர்.