கடலுார் : அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, தலைமை தபால் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு, அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் காசிநாதன், ஒன்றிய குழு தலைவர் பக்கிரி, மீனவரணி தங்கமணி, கந்தன், பகுதி செயலாளர்கள் வக்கீல் பாலகிருஷ்ணன், வெங்கட்ராமன், இலக்கிய அணி ஏழுமலை, ஒன்றிய கவுன்சிலர் கிரிஜா செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி
கடலுாரில், வி.சி., கட்சி சார்பில், மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கி, தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் துணை செயலாளர்கள் ஸ்ரீதர், பழனிவேல், மாநகர செயலாளர்கள் செந்தில், ராஜதுரை, செங்கதிர், ஜெயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். முதுநகரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும் வி.சி., கட்சியினர் மாலை அணிவித்தனர்.
பகுஜன் சமாஜ் சார்பில், மாநில இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் தலைமையில், தொழிற்சங்க நிர்வாகிகள் சவுந்தர், விஜி, மணிபாலன், பன்னீர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கடலுார் நகர காங்.,
கடலுார் மாநகர காங்., சார்பில், தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார் தலைமை தாங்கினார். மாநகரத் தலைவர் வேலுசாமி, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட பொதுச் செயலாளர்கள் காமராஜ், ராஜேஷ், ராஜா, மாநகர துணைத் தலைவர்கள் சங்கர், ராமு, பாலகுரு, பாசமணி, மாநகர செயலாளர்கள் செந்தில், மணி, சுரேஷ், பொருளாளர் ராஜி, மகளிரணி சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிதம்பரம் நகர காங்.,
சிதம்பரம் நகர காங்., சார்பில், அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நகர தலைவர் பழனி தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கஜேந்திரன், ரவி, ஜெயசீலன், முரளி முன்னிலை வகித்தனர். தில்லை ராஜா வரவேற்றார்.
மாநில காங்., துணைத் தலைவர் மணிரத்தினம், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கினார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் கிள்ளை சத்தியமூர்த்தி, இளைஞர் காங்., மாநில பொதுச் செயலாளர் அரவிந்த் மணிரத்தினம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். நிர்வாகிகள் லாரன்ஸ், அருள்மணி, கருணாநிதி, திலிபன், சுதாகர், கஸ்பா நாகராஜ், வசந்தபாலன், கொளஞ்சி, சக்திவேல், பிரபாகரன், அருள்மணி, குபேந்திரன், பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராஜரத்தினம் நன்றி கூறினார்.