வில்லியனூர் : வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில்இன்று மாலை பவுர்ணமி ஆன்மிக நடைபயணம் நடைபெறுகிறது.வில்லியனுாரில் உள்ள பழமை வாய்ந்த திருக்காமீஸ்வரர் கோவிலை சுற்றிலும் பிரசித்தி பெற்ற ஆறு சிவாலயங்கள் மற்றும் 18 சித்தர்கள் ஜீவ சமாதியும் அமைந்துள்ள ஆன்மிக பூமியாக திகழ்கிறது.
திருக்காமீஸ்வரர் கோவிலில் இருந்துதுவங்கும் ஆன்மிக நடைபயணம், நான்கு மாட வீதிகளில் உள்ள அம்மன், விநாயகர், தென்கலை வரதராஜபெருமாள் கோவில்களில் வழிபட்டு, அனந்தம்மாள் மடம் ஆஞ்சநேயர், ஏகாம்பர ஈஸ்வரன் கோவில், மூலக்கடை பாடல் பெற்ற வினாயகர் கோவில், ராமபரதேசி சித்தர் பீடம், வி.தட்டாஞ்சாவடி தேங்காய்சுவாமி சீத்தர் பீடம், வி.மணவெளி, ஒதியம்பட்டு நான்கு ரோடு சந்திப்பு வழியாக காசிவிஸ்வநாதர் கோவிலில் தரிசனம் முடித்து, சங்கராபரணி ஆறு மேம்பாலத்தில் கங்கா ஆரத்தி வழிபாடு நடைபெறுகிறது.
தொடர்ந்துதிருக்காஞ்சி கெங்கைகாவராக நதீஸ்வரர் கோவில், உறுவையாறு சாய்பாபா கோவில், கோட்டைமேடு வழியாக மீண்டும் கோவிலை சென்றடைகின்றனர்.
இன்று மாலை 6:00 மணிக்கு துவங்கும் 10வது பவுர்ணமி ஆன்மிக நடைபயணத்தில், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதியை சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் சிவ பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்க உள்ளனர்.