பேரையூர் : பேரையூர் தாலுகா டி. குன்னத்துாரில் அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் நடந்தது.
முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது: தி.மு.க., அரசின் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து டிச.9ல் புறநகர் மாவட்டத்தின் பேரூராட்சிகள், டிச.13ல் நகராட்சி, டிச.14ல் ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
ஜெ., பேரவை சார்பில் பிப்.23ல் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி 51 ஏழை மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கிறார்.
பிரதமர் தலைமையிலான ஜி 20 மாநாட்டு ஆலோசனையில் பழனிசாமி பங்கேற்றது அ.தி.மு.க., தொண்டர்களுக்கு கிடைத்த கவுரவம்.
இவ்வாறு பேசினார்.