திருமங்கலம் : கப்பலுார் டோல்கேட்டை அகற்றக் கோரியும், உள்ளூர் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாளை( டிச.,8) நடத்துவதாக அறிவித்த உண்ணாவிரதம் முதல்வர் ஸ்டாலின் வருகைக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த டிச.2ல் போராட்டக் குழு ஒருங்கிணைப்பு தலைவர் ஜெயராமன் தலைமையில் நடந்த கூட்டத்தில் டிச.8ல் அறிவித்த முற்றுகை போராட்டத்திற்கு பதிலாக உண்ணாவிரதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நாளை் முதல்வர் ஸ்டாலின் மதுரையில் இருந்து தென்காசிக்கு செல்வதால் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து, போராட்ட குழுவினரிடம் எஸ்.பி., சிவபிரசாத் பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டத்தை வேறு நாட்களுக்கு மாற்றுமாறு எஸ்.பி., வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து தேதி குறிப்பிடாமல் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக ஜெயராமன் தெரிவித்தார்.