திருக்கனுார் : சோம்பட்டு கிராமத்தில் நடைபெற்று வரும் கழிவுநீர் வாய்க்கால் பணியை ஆணையர் எழில்ராஜன் ஆய்வு மேற்கொண்டார்.
திருக்கனுார் அடுத்த சோம்பட்டு கிராமத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து மூலம் கழிவுநீர் வாய்க்கால் கட்டப்பட்டு வருகிறது.
இப்பணி மந்தமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் நமச்சிவாயத்திடம் அப்பகுதி மக்கள் புகார் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, அமைச்சர் நமச்சிவாயம் அறிவுறுத்தலின் பேரில், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியினை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, ஒப்பந்ததாரரிடம் பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.