சோழவந்தான் : சோழவந்தான் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலுக்கு செல்லும் மண்ணாடி மங்கலம் முதல் அய்யப்பன் நாயக்கன்பட்டி வரையான ரோடு கரடு, முரடாக இருப்பதால் பொதுமக்கள் விழுந்து எழுந்து செல்கின்றனர்.
வல்லப பெருமாள் கோயிலுக்கு தினமும் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் செல்கின்றனர். வெளியூர் பக்தர்கள் வாரம் ஒருமுறை இக்கோயிலுக்கு வருகின்றனர்.
வாழ்வில் நல்ல வழி பிறக்க வேண்டும் என கோயிலுக்கு வந்தால் கரடு, முரடான ரோட்டில் பயணித்து உடல் வலியை பெறுவதுதான் கிடைக்கும் பலன்.
மழைக் காலங்களில் ரோட்டின் பள்ளங்களில் மழைநீர் தேங்கி குட்டை போல் காட்சி தருகிறது. டூவீலர்கள், கார்கள் சேறுநிறைந்த பள்ளத்திற்குள் சிக்கி விடுகிறது. இதனால் போக்குவரத்தும் அடிக்கடி பாதிக்கிறது. எனவே இந்த ரோட்டை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.