திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சி 25வது வார்டு கவுன்சிலர் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்காக 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கமிஷனரிடம் வழங்கினார்.
பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் வகையில், மொத்த செலவில், மூன்றில் ஒரு பங்கு தனியார் பங்களிப்பும், மீதமுள்ள தொகை நகராட்சி மூலம் மேற்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, திண்டிவனம் நகராட்சி 25வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ரேகா நந்தகுமார் மூலம், ஜெயபுரம் 4வது தெருவில் மழை நீர் வடிவால் வாய்கால், சின்ன தெருவில் கல்வெர்ட் அமைத்தல், குறுக்குத் தெருவில் பேவர் பிளாக் மற்றும் மழை நீர் வடிகால் வாய்க்கால், 15வது வார்டில் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள 45.60 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கவுன்சிலர் மூன்றில் ஒரு பங்கு தொகையான 15 லட்சத்து 21 ஆயிரத்து 700 ரூபாய்க்கான காசோலையை நகராட்சி கமிஷனர் தட்சணாமூர்த்தியிடம் நேற்று வழங்கினார்.
ஒப்பந்ததாரர் நந்தகுமார், கவுன்சிலர்கள் பாபு, பரணிகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தினர்.