தேனி : தேனி காட்டுநாயக்கன்பட்டியில் காமுகுல ஒக்கலிக்கர் (காப்பு) கொழுஞ்சி சவுந்தரி குல தாயாதிகள் நிர்வகிக்கும் பெருமாள், வீரு நாகம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
கோயில் நிர்வாக தலைவர் ரமேஷ்பாபு, செயலாளர் குணசேகரன், பொருளாளர் ராமமூர்த்தி, துணைத் தலைவர் சேகர், திருப்பணிக்குழு தலைவர் ஈஸ்வரன், சுருளிராஜ், பாலகிருஷ்ணன் முன்னிலையில் மணி பட்டாச்சாரியார் கும்பத்திற்கு புனித நீர் ஊற்றினார். தாடிச்சேரி முன்னாள் ஊராட்சித் தலைவர் தயாளன், காட்டுநாயக்கன்பட்டி 9 வது வார்டு கவுன்சிலர் கவிதா, நந்தகோபால், வழக்கறிஞர் வீரமணி, சில்லமரத்துப்பட்டி முன்னாள் அ.தி.மு.க., கிளைச் செயலாளர் முருகவேல், சுருளிப்பட்டி இளையராஜா, கேபிள் டிவி கணேசன், தேனி விநாயகா பெயிண்ட்ஸ் பிரபாகரன், கற்பக விநாயகர் பைனான்ஸ் ரவிச்சந்திரன், சென் டிரேடர்ஸ் கார்த்திகேயன், மீனாட்சி மார்பிள் பிரீத்தம், சரவணாஸ் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் சரவணக்குமாரன், சுவாகத் கம்ப்யூட்டர்ஸ் தினேஷ், தேக்கடி ஸ்பைசஸ் ராஜசேகரன், கெளமாரி பேக்கரி லட்சுமணன், சுதாகர், பாலாஜி எலக்ட்ரிக்கல்ஸ் சின்னராஜ், எம்.பீட்சா ராஜாராம், எஸ்.பி.ஹெச்., டெக் பாலசுப்பிரமணியன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள், தாயாதிகள், ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.
க.விலக்கு லட்சுமி கேட்டரிங் ஜெயகுமார் அன்னதான சமையல் ஏற்பாடுகளை செய்திருந்தார். கும்பாபிஷேக நிகழ்வில் பிறந்த வீட்டுப்பிள்ளைகளை வரவேற்று, வில்வக்கூடை சீர் வழங்கப்பட்டது.