சிதம்பரம் : மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நர்சிங் கல்லூரி மாணவிகளை, பாண்டியன் எம்.எல்.ஏ., சந்தித்து ஆறுதல் கூறினார்.
சிதம்பரத்தில், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியின் நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவிகள் தங்களது விடுதியில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டு, வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர்.
இதனால், 15க்கும் மேற் பட்ட மாணவிகள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறும் மாணவிகளை, சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
பழம், பிரட், ஹார்லிக்ஸ் உள்ளிட்ட உணவு பொருட்களையும் வழங்கினார். இதுபோன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நடக்காமல் இருக்கவும், தரமான உணவை வழங்கவும், கல்லுாரி நிர்வாகத்திடம் அறிவுறுத்துவதாக தெரிவித்தார்.
மேலும், டாக்டர்களிடம், மாணவிகளுக்கு தேவையான உயரிய சிகிச் சைகளை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அ.தி.மு.க., நிர்வாகிகள் குமார், ரெங்கம்மாள், வழக்கறிஞர் கீதா செழியன், மணிராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.