விழுப்புரம் : விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில், எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அதனையொட்டி, கல்லுாரி வளாகத்தில், எச்.ஐ.வி., அடையாளத்தை குறிக்கும் ரெட் ரிப்பன் சின்னத்தை, 500 மாணவியர்கள் மூலம் உருவாக்கி, எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்களை சமமாக ஏற்றுக் கொள்வதன் முக்கியத்துவம் மற்றும் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், மாணவிகள் எச்.ஐ.வி., குறித்த விழிப்புணர்வு பதாகைகளை, கல்லுாரி அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்தினர்.