மதுரை : மதுரையில் அகில இந்திய அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் மாநாடு சி.ஐ.டி.யூ., பொதுச் செயலாளர் தபன்சென் தலைமையில நடந்தது.
இதில் சி.ஐ.டி.யூ., தலைவர் ேஹமலதா, துணைத் தலைவர் சவுந்திரராசன், செயலாளர் சுகுமாறன், அகில இந்திய அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்க பொதுச் செயலாளர் சிந்து, தலைவர் உஷாராணி பங்கேற்றனர்.
தேசிய பொதுச்செயலாளர் தபன்சென் பேசியதாவது: அங்கன்வாடி ஊழியர்களால் ஒட்டு மொத்த குழந்தைகளின் வாழ்வு மேன்மை அடைகிறது. இந்த ஊழியர்கள் ஏழை குழந்தைகளுக்கு உணவு, பாதுகாப்பு, கல்வி அளித்து, நாடு வளர்ச்சியடைய முக்கிய பங்காற்றுகின்றனர். இத்திட்டம், அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும்.
அங்கன்வாடியின் திட்டங்களை தகர்க்க மத்திய அரசு மறைமுகமாக செயல்படுகிறது. அங்கன்வாடி பணிகளையும் மேம்படுத்தி, மக்கள் நலத் திட்டங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் நாம் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.