மேலுார் : கர்நாடகா மாநிலம் மைசூருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணா 29, யோகா ஆசிரியர். பொதுமக்கள் ஆரோக்கியமாக வாழ யோகாவை கற்கவும், இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் மைசூருவில் இருந்து அக்.,16ல் நடைபயணத்தை துவங்கினார்.
51வது நாளான நேற்று மேலுாருக்கு வந்தார். அவரை பா.ஜ., நகர் தலைவர் சேவுகமூர்த்தி தலைமையில் வரவேற்றனர். பின்னர் பள்ளிகளில் இலவசமாக மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார்.
அவர் கூறியதாவது: இந்தியா முழுவதும் 15 ஆயிரம் கி.மீ., துாரத்தை 3 ஆண்டுகள் நடைபயணமாக சென்று பொதுமக்களிடையை விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். செல்லும் வழியில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிப்பதோடு மரக்கன்றுகளை நட வலியுறுத்துகிறேன், என்றார்.
பின்னர் தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றார்.