மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என தமிழக அரசு அறிவித்தது. அதற்காக www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைக்க தனி 'லிங்க்' உருவாக்கப்பட்டது.
அதில் மின் இணைப்பு, அலைபேசி எண், ஆதார் போட்டோ பதிவேற்ற வேண்டும். பின் வரும் ஓ.டி.பி., எண்ணை பதிவிட்டால் ஆதார் இணைத்தது குறித்த தகவல் வரும்.
மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
ஆன்லைன் தவிர மின்நுகர்வோர் அவரவர்மின் இணைப்புக்குரியஅலுவலகங்களில் ஆதாரை இணைக்க முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முகாம் துவங்கி இரண்டு வாரங்களைக் கடந்தும் மக்கள்பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை.
மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சம் இணைப்புகள் உள்ளன. கடந்த 15 நாட்களில் 25 சதவீத அளவுக்கே இதுவரை ஆதாரை இணைத்துள்ளனர். பண்டிகை நாட்கள் தவிர அனைத்து வேலை நாட்கள், சனி, ஞாயிறுகளில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை முகாம் நடக்கும்.
டிச. 31 மட்டுமே காலஅவகாசம் உள்ளதால் மக்கள் விரைந்து ஆதார் எண் இணைக்க முன்வர வேண்டும், என்றனர்.
புதிய ஆதார் பெற்றவர்கள், ஏற்கனவே பெற்றவர்கள் என பலருக்கும் ஆதாரில் பல சிக்கல்கள் இருக்கலாம். அலைபேசி எண், முகவரி, பிறந்ததேதி, பெற்றோர் பெயர், இன்ஷியல், போட்டோ என பல தகவல்களை மாற்ற, திருத்த வேண்டியிருக்கும். இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வு காண மாவட்ட நீதிமன்றம் எதிரேயுள்ள மத்திய அரசின் ஆதார் சேவா கேந்திரா செல்லலாம். வாரத்தில் 7 நாட்களும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை செயல்படுகிறது. வங்கி, மின்வாரியம் உட்பட பல சேவைகளுக்கு ஆதார் இணைக்கும் சூழல் உள்ளது. இணைக்கும் முன் கேந்திராவில் ஆதாரை சரி செய்து கொள்ளலாம்.