மாவட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி புரியும் பயனாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.281 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாரம் தோறும் வங்கிகளில் இதற்கான பணம் செலுத்தப்படுகிறது.
பல இடங்களில் வேலைத்திட்டத்தில் பணிபுரியும் நபர்கள் வேலை செய்யாமல் பணம் பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுகிறது.
இத்திட்டத்தில் முறைப்படி கண்காணிப்பு இல்லாததால் அரசு பணம் வீணாகி வருகிறது.
இதில் கோடிக்கணக்கான அரசு பணம் வீணாவதை தவிர்க்க முறையான அரசு மேலாண்மை கட்டமைப்பை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள் இத்திட்டத்திற்கு நியமிக்கப்பட வேண்டும். இதனால் வீணாகி வரும் பல கோடி ரூபாய் அரசு பணம் முறைப்படுத்தப்படும்.
இத்திட்டத்தில் ஒதுக்கப்படும் பணிகளும் முறைப்படுத்தப்படும். இதோடு இவர்களால் ஒன்றிய அலுவலக அலுவலர்களின் பணி சுமை குறைக்கப்பட்டு ஊராட்சி ஒன்றிய பணிகளில் கவனம் செலுத்த ஏதுவாகும்.