வேடசந்தூர், : வேடசந்துார் முத்துப்பழனியூரை சேர்ந்த டிரைவர் முனியப்பன் மனைவியை தாக்கிய வழக்கில்
ஜாமினில் வந்த செந்தில் முருகன் கொலை மிரட்டல் விடுக்க, முனியப்பன் குடும்பத்தினருடன் கூம்பூர் ஸ்டேஷன் சென்று பெட்ரோலை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
வேடசந்துார் முத்துப்பழனியூரை சேர்ந்தவர் டிரைவர் முனியப்பன் 35. இவருக்கும் இவரது உறவினர் செந்தில் முருகனுக்கும் நிலப்பிரச்னை இருந்து வந்தது.
இதில் ஏற்பட்ட பிரச்னையில் செந்தில் முருகன், முனியப்பனின் மனைவி தேவியை கன்னத்தில் தாக்கினார்.
கூம்பூர் போலீசார் வழக்கு பதிய ஜாமினில் வந்த செந்தில் முருகன், முனியப்பன் வீட்டுக்கு சென்று என் மீது புகார் கொடுத்தாயா, உன்னையும் உனது குடும்பத்தையும் என்ன செய்கிறேன் பார் என மிரட்டி உள்ளார்.
இதில் பயந்து போன முனியப்பன் தனது குடும்பத்தினருடன் கூம்பூர் போலீஸ் ஸ்டேஷன் சென்று மிரட்டிய செந்தில் முருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரினார்.
பொறுமையாக இருங்கள் நடவடிக்கை எடுப்போம் என போலீசார் கூறிய நிலையில், பொறுமையிழந்த முனியப்பன் தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை பிடித்து தலையில் ஊற்றியதோடு, குடித்தும்விட்டார்.
வயிறு எரிவதாக அழுது புரண்ட அவரை அங்கிருந்தவர்கள் வேடசந்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.