இடையகோட்டையில் கின்னஸ் சாதனைக்காக 6 லட்சம் மரக்கன்றுகள் ரெடி | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
இடையகோட்டையில் கின்னஸ் சாதனைக்காக 6 லட்சம் மரக்கன்றுகள் ரெடி
Added : டிச 07, 2022 | |
Advertisement
 
Latest district Newsஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டையில் அமைச்சர் சக்கரபாணி முயற்சியால் கின்னஸ் சாதனைக்காக ஆறு மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான ஆயத்த பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் வனபரப்பை 33 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

இதனை நிறைவேற்றும் வகையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி முயற்சியால் டிச. 23 ல் இடையகோட்டையில் 117 ஏக்கரில் 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.

இதற்கான ஆயத்த பணிகளாக குழிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நிலத்தை சமன்படுத்தும் பணியில் 20 க்கு மேற்பட்ட மண் அள்ளும் இயந்திரங்கள், டிப்பர் லாரிகள் இயங்கி வருகின்றன. லாரிகள் மூலம் மரக்கன்றுகள் கொண்டு வரும் பணி நடந்து வருகிறது.

இதன் விழாவில் தி.மு.க., இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

ஆயத்த பணிகளை கூடுதல் கலெக்டர் தினைஷ்குமார், பழநி ஆர்.டி.ஓ., சிவகுமார் பார்வையிட்டனர்.

நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர், வெள்ளைச்சாமி, கமிஷனர் சக்திவேல், தொப்பம்பட்டி ஒன்றிய துணைத் தலைவர் தங்கம், தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன், தங்கராஜ், சுப்பிரமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், ஊராட்சி தலைவர்கள் உடன் இருந்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X