ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே மாங்காடு பகுதியில், நாகநாத ஈஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு பூசாரி ரமேஷ், 65, கோவிலை பூட்டி சென்றார்.
நேற்று காலை வந்த போது, கோவில் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கோவில் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்ததில், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அம்மன் தாலி, கம்மல் மற்றும் கோவில் உண்டியலை உடைத்து, காணிக்கை பணம் திருட்டு போனது தெரிந்தது.
இது குறித்து ஆற்காடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.