கோவை : 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்க மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
இப்படிப்புகளில் சேர பல்வேறு தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வரும், 2022-23ம் கல்வியாண்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளில் சேர மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதுநிலை மருத்துவம் முடித்து, அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் மாணவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக நாளை மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும், 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, 12ம் தேதி கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.