'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' படிப்பு விண்ணப்பிக்க நாளை கடைசி | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' படிப்பு விண்ணப்பிக்க நாளை கடைசி
Added : டிச 07, 2022 | |
Advertisement
 



கோவை : 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்க மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.



தமிழகத்தில், 12 அரசு மருத்துவக் கல்லுாரிகள், 3 தனியார் கல்லுாரிகள் என, 15 மருத்துவக் கல்லுாரிகளில், நரம்பியல் அறுவை சிகிச்சை, குழந்தைகள் நல அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை, இருதயவியல், புற்றுநோய் மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில் 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இப்படிப்புகளில் சேர பல்வேறு தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வரும், 2022-23ம் கல்வியாண்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளில் சேர மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதுநிலை மருத்துவம் முடித்து, அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் மாணவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக நாளை மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும், 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, 12ம் தேதி கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X