புதுச்சேரி : உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி சாரதா கங்காதரன் கல்லுாரியில் ரத்ததான முகாம் நடந்தது.
ஜிப்மர் மருத்துவமனை ரத்தவங்கி பிரிவு மருத்துவ அலுவலர் வடிவேலு தலைமையிலான மருத்துவக் குழுவினர், பேராசிரியர்கள் ஜெயக்குமார், கோபிநாத் மற்றும் மாணவர்கள் 75 பேரிடம் இருந்து ரத்ததானம் பெற்றனர்.முகாம் ஏற்பாடுகளை, செஞ்சுருள் சங்கம், இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி, இணை ஒருங்கிணைப்பாளர் கணேஷ், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மரியசெல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.