சேலம், டிச. 7-
சேலம், குமரகிரி பைபாஸில் உடையாப்பட்டி பவர் ஹவுஸ் அருகே உள்ள, கைலாஷ் மான்சரோவர்(சி.பி.எஸ்.இ.,) பள்ளியில், கைலாஷ் துாரிகா'22 தொடக்க விழா நடந்தது. அதில், ஏ.வி.ஆர்., ஸ்வர்ணமஹால், கேம்லின், டைட்டன் வேர்ல்டு நிறுவனங்கள், சோஷியல் மீடியா பார்ட்னர், மீடியா பார்ட்னர், சேலம் ஏ.வி.எஸ்., சக்தி கைலாஷ் கல்விக்குழுமம் இணைந்து, ஓவியப்போட்டியை நடத்தின. மாநகராட்சியில் உள்ள மழலையர், தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மேலும், 1,500 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
ப்ரீ கே.ஜி., முதல், பிளஸ் 2 வரையுள்ள குந்தைகளுக்கு ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி மாணவ, மாணவியரின், கலைநயத்துடன் கூடிய கலைக்கண்காட்சியும் இடம்பெற்றது. பெற்றோரை குதுாகலப்படுத்தக்கூடிய விளையாட்டும் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சேலம் ஏ.வி.எஸ்., - சக்தி கைலாஷ் கல்வி குழும தலைவர் கைலாசம், செயலர் ராஜவிநாயகம், தாளாளர் செந்தில்குமார், பள்ளி முதல்வர் வேங்கடஅழகிரி, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.