குமாரபாளையம், டிச. 7-
சபரிமலை சேவைக்கு, ப.வேலுார் கல்லுாரி மாணவர்கள், 41 பேரை ஐயப்ப சேவா சங்கத்தினர் வழியனுப்பி வைத்தனர்.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தை மாத பிறப்பு வரை, கேரள மாநிலம் சபரிமலை சன்னிதானத்தில் ஐயப்ப சுவாமியை தரிசிக்க பல மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர்.
மகர விளக்கு காலத்தில் அதிக பக்தர்கள் வருவார்கள் என்பதால் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், சபரி
மலைக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்திட, கல்லுாரி மாணவர்களை பல கட்டங்களாக அனுப்பி வைப்பது வழக்கம்.
குமாரபாளையத்தில் இருந்து பரமத்தி வேலுார் கந்தசாமி கண்டர் கல்லுாரி மாணவர்கள், 41 பேர், சேவை செய்ய அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை வழியனுப்பும் விழா மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் நடந்தது.
ஐயப்பா சேவா சங்க மாவட்ட செயலர் ஜெகதீஸ், கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மாதவன், ராமகிருஷ்ணன், அருணாராணி, மாவட்ட கண்காணிப்பாளர் பிரவீன்காந்த், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.