சேந்தமங்கலம், டிச. 7-
சேந்தமங்கலம் அடுத்த, வாழவந்திகோம்பை பஞ்., அம்மன்பள்ளம்,
பூச்சனாங்குட்டையில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 12 ஆண்டுக்குப்பின், பச்சை தென்னை மட்டை பந்தல் அமைத்து, நோய் தாக்கிய கால்நடைகள் குணமடைய வேண்டி, மோகனுார் காவிரியாற்றிலிருந்து புனிதநீர் எடுத்து வந்து, காளியம்மன் சுவாமிக்கு கும்பம் பாலித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
கடந்தாண்டு சேந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கி, 50க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்தன. இதனால்,
அம்மன்பள்ளம், பூச்சனாங்குட்டை பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்றுகூடி, கோமாரி நோய் தாக்குதலை கட்டுப்
படுத்த வேண்டி, காளியம்மன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.