நாமக்கல், டிச. 7-
''அன்பழகனின், நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, 100 இடங்களில் மரக்கன்று நடவு செய்ய வேண்டும்,'' என, தி.மு.க., மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் பேசினார்.
கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளரும்,
எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் பேசியதாவது: அன்பழகனின் நுாற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், கிளை கழகம் முதல், அனைத்து வார்டு பகுதிகளிலும், அவரது படத்து மலர் துாவி மரியாதை செய்ய வேண்டும்.
நுாறு இடங்களில், மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும். மேலும், 100 பள்ளி, கல்லுாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில், அன்பழகன் படம் திறக்க வேண்டும். அதேபோல், கட்சியின் மூத்த முன்னோடிகள், 100 பேருக்கு பொற்கிழி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கட்சியின் துணை கொள்கை
பரப்பு செயலாளர் சுந்தரம்,
நகராட்சி சேர்மன் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி உள்பட பலர் பங்கேற்றனர்.