திருச்செங்கோடு, டிச. 7-
திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், 5 ஊராட்சிகளுக்கு பேட்டரி குப்பை வாகனம் வழங்கும் விழா நடந்தது. ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா தலைமை வகித்தார்.
துாய்மை பாரத இயக்கம் திட்டத்தில், கிராம ஊராட்சிகளில் குப்பை சேகரிக்கப்பட்டு, மக்கும் மற்றும் மக்காத குப்பையாக பிரித்து உரம் தயாரிக்க, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மொளசி, பிரிதி, டி.புதுப்பாளையம், சிக்கநாயக்கன்பாளையம், அணிமூர் ஆகிய, 5 ஊராட்சிகளுக்கு பேட்டரி குப்பை வாகனங்கள் வழங்கப்பட்டன.
அதனை, திருச்செங்கோடு தொகுதி எம்.எல்.ஏ., ஈஸ்வரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மதுராசெந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.