எருமப்பட்டி, டிச. 7-
பவித்திரம் பஸ் ஸ்டாப் மெயின் ரோட்டில், வேகத்தடை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
எருமப்பட்டி, துறையூர் மெயின் ரோட்டில் பவித்திரம் பஸ் ஸ்டாப் உள்ளது. இப்பகுதியில், 100க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளிகள் உள்ளதால், தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
மேலும், 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், நகரங்களுக்கு வந்து செல்ல முக்கிய இடமாக பயன்படுத்தும் இந்த பவித்திரம் பஸ் ஸ்டாப் அருகே, வேகத்தடை இல்லாததால் மாணவர்கள், கிராம மக்கள் ரோட்டை கடக்கும்போது அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத்துறையினர், வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.