வெண்ணந்துார், டிச. 7-
வெண்ணந்துார் பேரூராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், 50 ஆயிரம் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயம், விசைத்தறி, சைசிங், நுால் மில்கள் உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளன. இப்பகுதி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தின் கீழ் உள்ளது.
ஆனால், ராசிபுரம் பத்திரப்பதிவு அலுவலகம், 10 கி.மீ., துாரத்தில்
உள்ளதால், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்கள்
உள்ளன. எனவே, வெண்ணந்துாரை மையமாக கொண்டு, அத்தனுார், ஒ.சவுதாபுரம், நடுப்பட்டி, மின்னக்கல் வருவாய் பகுதிகளை இணைத்து புதிய பத்திரப்பதிவு அலுவலகத்தை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அமையுமானால்
பத்திரப்பதிவு செய்ய வருவோர், அத்துறையின் ஊழியர்கள், பத்திரை எழுத்தாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பத்திரப்பதிவு அலுவலகம் வெண்ணந்துாரில் அமையும் போது பல தரப்பினருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும்.