நாமக்கல், டிச. 7-
பா.ஜ., பட்டியல் அணி சார்பில், அம்பேத்கரின், 66வது நினைவு தினம், நாமக்கல் மணிக்கூண்டு அருகில் அனுசரிக்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் ராம்குமார் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர்
முத்துக்குமார், செயலாளர் சதீஷ் முன்னிலை வகித்தனர்.
* கிழக்கு மாவட்ட வி.சி., சார்பில், நாமக்கல்-மோகனுார் சாலை அண்ணாதுரை சிலை அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். நாமக்கல் நகர செயலாளர் வணங்காமுடி, மாநில துணை செயலாளர் பாலு, செய்தி தொடர்பாளர் நீதிநாயகம் முன்னிலை வகித்தனர். அம்பேத்கர் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நாமக்கல் தொகுதி செயலாளர் அரசு உள்பட பலர் பங்கேற்றனர்.
*நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் அம்பேத்கர்படத்திற்கு மரியாதை செய்யபட்டது. மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். இ.கம்யூ., மாவட்ட செயலாளர் அன்புமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
*எலச்சிபாளையத்தில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் ஜெயராமன் தலைமையில் அம்பேத்கரின் படத்துக்கு
மரியாதை செலுத்தப்பட்டது.