ப.வேலுார், டிச. 7--
ப.வேலுார் அருகே பொத்தனுார் சக்ரா நகர் பகுதிகளில் உயர் அழுத்த மின்சாரம் வருவதால், அப்போது மின் இணைப்பில் உள்ள மின் சாதனங்கள் பழுதாகி விடுகின்றது.
நாமக்கல் மாவட்டம் பொத்தனுார் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சக்ரா நகர்களில் விடியற்காலை நேரத்தில் வீட்டு மின் இணைப்புக்கு அதிக வோல்டேஜுடன் மின் சப்ளையாவதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த அக்டோபர், 20ஆம் தேதி சக்ரா நகர் கடைசி தெருவில் உள்ள குடியிருப்பில், 26 வீடுகளில் கூடுதல் வோல்டேஜ் சப்ளையானதால், 26 'டிவி'கள் பழுதானது. ஒரு சில 'வீடு'களில், 'டிவி'கள் அதிக சத்தத்துடன் வெடித்தன.
பொதுமக்கள் அப்போதே இது குறித்து மின்சார வாரியத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மீண்டும் காலை நேரங்களில் மின்சார சப்ளை அதிக வோல்டேஜ் வருவதால் அப்போது மின் இணைப்பு இருக்கும், 'டிவி'கள் பழுதாகி வருகின்றன.
மின்சார வாரிய அதிகாரிகள் அதிக சப்ளை வருவதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.