மோகனுார், டிச. 7-
பா.ஜ., மாவட்ட விவசாய அணி சார்பில், கார்த்திகை திருநாளை முன்னிட்டு, நீர் பெருக, நிலம் செழிக்க, தமிழகம் சிறக்க, தமிழகத்தில் உள்ள
முக்கிய நீர் நிலைகளில்,
தீப ஆராதனை திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
மோகனுார் அசலதீபேஸ்வரர் கோவில் அருகே காவிரி ஆற்றில் நடந்த நிகழ்ச்சிக்கு, பா.ஜ., மாநில விவசாய அணி மாநில செயலாளர் ராதிகா தலைமை வகித்தார்.
மந்திரங்கள் சொல்லி, பூக்கள் துாவி காவிரி தாயை வணங்கினர். அதையடுத்து, காவிரி ஆற்றில் தீபம் ஏற்றி, தீபாராதனை நடத்தினர். அகில இந்திய வாழை விவசயிகள் சங்க பொதுச் செயலாளர் அஜிதன். நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., விவசாய அணி மாவட்டத் தலைவர் காளியப்பன், துணை தலைவர்கள் வெங்கடாச்சலம், தியாகராஜன், மோகனுார் கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாடு பிரிவு தலைவர் நரேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.