ஓசூர், டிச. 7-
பாலக்கோடு அருகே மல்லப்பட்டியை சேர்ந்தவர் வடிவேல், 40, கல்லுடைக்கும் தொழிலாளி; இவர் மனைவி மாது, 36; அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார்; வடிவேல், மதகேரியை சேர்ந்த கணவனை இழந்த பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.
மனைவியிடமிருந்து அடிக்கடி பணம் பறித்து வந்த வடிவேல், மனைவியை கொலை செய்து, அவர் சேமிப்பு பணத்தை அபகரித்து, கள்ளக்காதலியுடன் இருக்க திட்டமிட்டார்.
நேற்று வடிவேல், தங்க நகை எடுத்து தருவதாக மொபைல்போனில் பேசி மனைவி மாதுவை, ராயக்கோட்டைக்கு பஸ்சில் வரவழைத்துள்ளார். உடையாண்டஹள்ளி பஸ் ஸ்டாப்பில் இறங்கிய மாதுவை, கூலிப்படையினர், எட்டு பேருடன் சேர்ந்து காரில் கடத்தி வடிவேல் கொலை செய்ய முயன்றார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால், இரு கார்களில் ஒன்பது பேரும் தப்பினர்.
மாது புகார்படி, ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார், வடிவேல், 40, எச்.செட்டிப்பள்ளி ரமேஷ், 40, கவுதாளம் ஜேம்ஸ், 30, கர்நாடக மாநிலம், மாண்டியா சந்தோஷ், 30, பாலக்கோடு வெள்ளிச்சந்தை காமராஜ் நகர் சந்திரசேகர், 32, போயர் சாலையை சேர்ந்த ராம்ராஜ், 31, பாலக்கோடு அருகே தண்டுகாரனஹள்ளி விஜயகாந்த், 28, போயர் சாலை ஈஸ்வரன், 38, ஆகிய, எட்டு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, இரண்டு கார், கத்தி, அரிவாள், உருட்டு கட்டை, 50 ஆயிரம் ரூபாயை
பறிமுதல் செய்தனர்.