தர்மபுரி, டிச. 7-
தி.மு.க., தர்மபுரி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், தர்மபுரி, தி.மு.க., அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர்
செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ., தடங்கம் சுப்பிரமணி பேசினார். இதில், மறைந்த, தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகனின் நுாற்றாண்டு விழாவை, தர்மபுரி கிழக்கு மாவட்டம் முழுவதும் வரும், 19ல் சிறப்பாக கொண்டாடி நலத்திட்ட உதவிகள் வழங்குவது மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தர்மபுரி லோக்சபா எம்.பி, செந்தில்குமார், தர்மபுரி மொரப்பூர் ரயில் பாதை திட்டத்தை தொடர்ந்து வலியுறுத்தி, இத்திட்டத்துக்கான நில அளவீடு பணி துவங்கியுள்ளது. தர்மபுரி மொரப்பூர் ரயிலில் பாதை திட்டத்துக்கு வரும் பட்ஜெட்டில், மத்திய அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் தர்மசெல்வன், தர்மபுரி நகர செயலாளர் நாட்டான் மாது உட்பட, பலர் பங்கேற்றனர்.
* ஓசூர் மாநகர, தி.மு.க., செயற்குழு கூட்டம், அவைத்தலைவர் செந்தில்குமார் தலைமையில் நேற்று மாலை நடந்தது. மாநகர செயலாளர் சத்யா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகன் நுாற்றாண்டு விழா, கட்சியின் ஆக்கப்பணிகள், பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. பகுதி செயலாளர்கள் ஆனந்தய்யா, ராமு, வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.