கிருஷ்ணகிரி, டிச. 7-
சட்ட மேதை அம்பேத்கரின், 66வது நினைவு நாளையொட்டி, கிருஷ்ணகிரி தாலுகா அலுவலக வளாகத்திலுள்ள அவரது சிலைக்கு, தி.மு.க.., சார்பில், பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் தலைமையில், கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், அவைத்தலைவர் நாகராஜ், நகர செயலாளர் நவாப், நகர்மன்ற தலைவர் பரிதா நவாப் உள்பட பலர் பங்கேற்றனர்.
வி.சி., மாவட்ட செயலாளர் கனியமுதன் தலைமையில், கட்சியினர் உறுதிமொழி ஏற்றனர். கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., தலைமையில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, மவுன அஞ்சலி செலுத்தினர். இதில், மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், எம்.எல்.ஏ.,க்கள் அசோக்குமார், தமிழ்செல்வம், நகர செயலாளர் கேசவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
* தேன்கனிக்கோட்டை அண்ணா நகரில், ஓசூர், தி.மு.க., எம்.எல்.ஏ., பிரகாஷ், மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
* ஊத்தங்கரை ரவுண்டாணாவில், அ.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் தலைமையில் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
* கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி, அம்பேத்கர் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
* தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகே உள்ள, அம்பேத்கர் சிலைக்கு,
தர்மபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில், தி.மு.க.,வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., சார்பாக தர்மபுரி நகர செயலாளர் ரவி தலைமையிலும், பா.ஜ., மாவட்ட தலைவர் பாஸ்கர், வி.சி., தர்மபுரி, கிருஷ்ணகிரி மண்டல செயலாளர் நந்தன் உட்பட, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
* பாப்பிரெட்டிப்பட்டி யூனியன் மோளையானுாரில் தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்ட
செயலாளர் பழனியப்பன் தலைமையில் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார், பொம்மிடி, கடத்துாரில், அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.