கிருஷ்ணகிரி, டிச. 7--
ஓசூரில் நடந்த யோகா போட்டிகளில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர்
பங்கேற்றனர். பர்கூர், வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளி மாணவ, மாணவியர், 55 பேர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
முதல் கட்டப்போட்டியில், நடனத்துடன் கூடிய யோகா முறையில், மாணவ, மாணவியர் வெற்றி பெற்று, 'சாம்பியன் ஆப் சாம்பியன்' என்ற பட்டத்தையும், பதக்கத்தையும் வென்றனர். 'காமன் ஆசனாஸ்' என்ற யோகாவிற்கு பதக்கமும், முதல் மூன்று இடங்களையும் பெற்றனர். பதக்கம் வென்ற மாணவர்களை பள்ளி தாளாளர் கூத்தரசன், கேடயம் மற்றும் பாராட்டு
சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். பள்ளி துணை முதல்வர் மஞ்சுளா
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், இப்பள்ளி மாணவி அபிதா, ஓசூர், அதியமான் பொறியியல் கல்லுாரியில் நடந்த யோகா போட்டியில், 14 வயது பிரிவில், யோகா நித்ரா
ஆசனத்தை, 20 நிமிடம், 6 நொடிகளில் செய்து முடித்து, 'குளோபல் வோர்ல்டு ரெக்கார்ட்' என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளார்.