ஓசூர், டிச. 7-
ஓசூர் வட்டார விவசாயிகள், பி.எம்., கிசான் திட்டத்தில் தொடர்ந்து நிதியுதவி பெற, என்ன செய்ய வேண்டும் என, வேளாண் உதவி இயக்குனர்
புவனேஸ்வரி அறிவுரை வழங்கினார்.
இது தொடர்பாக, அவர்
வெளியிட்டுள்ள அறிக்கை:
ஓசூர் தாலுகாவில், பிரதமரின்
கவுரவ நிதியுதவி திட்டமான பி.எம்., கிசான் திட்டத்தில், விவசாயிகளுக்கு மூன்று தவணையாக, 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதற்கு, விவசாயிகள் தங்களது பதிவை புதுப்பிக்க வேண்டும். 3,400 விவசாயிகள் பதிவை புதுப்பித்துள்ளனர். மீதமுள்ள, 3,070 விவசாயிகள் பதிவை புதுப்பிக்கவில்லை. அதனால் இதுவரை, வங்கி கணக்கிற்கு சென்று வந்த தவணை தொகை, 2,000 ரூபாயை, அவர்களால் பெற முடியவில்லை.
எனவே, அந்த விவசாயிகள் உடனடியாக இ.கே.ஒய்.சி., எனப்படும், தங்களது சுய விபரங்களான ஆதார், நிலத்தின் சிட்டா நகல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் ஆகியவற்றை வழங்க வேண்டும். அதற்காக, தங்கள் அருகில் உள்ள மக்கள் கணிணி மையம், தலைமை தபால் நிலையங்கள், ஓசூர் வேளாண் விரிவாக்க மையம் ஏதாவது ஒன்றை அணுகி, கைரேகை அல்லது ஆதார் ஓ.டி.பி., எனப்படும், ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் பெற்று, தங்கள் பி.எம்., கிசான் திட்ட
பயனாளி பதிவை புதுப்பித்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.