கிருஷ்ணகிரி, டிச. 7-
கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ., மூர்த்தி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த டாட்டா 407 டிரக்கை மடக்கி சோதனையிட்டதில், 50 கிலோ அளவிலான, 93 மூட்டைகளில், 4,650 கிலோ ரேஷன் அரிசி, கர்நாடக மாநிலம், பங்கார்பேட்டுக்கு கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து, வேனை ஒட்டி வந்த கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் பங்கார்பேட்டை சேர்ந்த குபேந்திரன், 28, என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், போச்சம்பள்ளி, கண்ணன்டஹள்ளி பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி, கர்நாடகாவிற்கு கடத்த முயன்றது தெரிந்தது. இதுகுறித்து, கண்ணன்டஹள்ளி ஜெயந்தி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.