சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று, தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. மொத்தம், 41 மூட்டைகள் வரத்தாகி, அதிகபட்சமாக பருப்பு கிலோ, 90.59 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக, 86.41 ரூபாய்க்கும், சராசரியாக, 88.50 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 18.97 குவிண்டால் தேய்காய் பருப்பு, ஒரு லட்சத்து, 46 ஆயிரத்து, 132 ரூபாய்க்கு விற்பனையானது.
த.மு.மு.க., ஆர்ப்பாட்டம்
ஈரோடு: பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், ஈரோடு கருங்கல்பாளையத்தில் நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது. அக்கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். மாநில செயலாளர் அல்தாப் அஹமத், மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது ரிஸ்வான் ஆகியோர் கண்டன உரையாற்றினார். இதில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சென்னிமலை டவுன் பஞ்.,ல்
சாலை அமைக்கும் பணி
சென்னிமலை: சென்னிமலை டவுன் பஞ்.,க்குட்பட்ட, 1வது வார்டில், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை, நேற்று நடந்தது. மாவட்ட கவுன்சிலரும், சென்னிமலை மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளருமான செல்வம் பணியை தொடங்கி வைத்தார். பேரூர் தி.மு.க., செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். விழாவில், சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், வார்டு கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மல்லிகை பூ கிலோ ரூ.1,732
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று, பூக்கள் ஏலம் நடந்தது. இதில், மல்லிகைப்பூ கிலோ, 1,732 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல், முல்லை, 840, காக்கட்டான், 750, ஜாதி முல்லை, 1,000, செண்டுமல்லி, 45, கோழிக்கொண்டை, 84, கனகாம்பரம், 350, சம்பங்கி, 60, அரளி பூ, 200, துளசி, 40, செவ்வந்தி, 120 ரூபாய்க்கு விற்பனையானது.
ரூ.3.82 லட்சத்துக்கு விற்ற
வேளாண் பொருட்கள்
அம்மாபேட்டை: அம்மாபேட்டை அருகே, பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று, தேங்காய், 2,000 காய்கள் வரத்தாகி, 21 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் பருப்பு, 16 மூட்டைகள் வரத்தாகி, 18 ஆயிரத்துக்கும், நிலக்கடலை, 80 மூட்டை வரத்தாகி, 19 ஆயிரத்துக்கும், நெல், 16 மூட்டைகள் வரத்தாகி, 16 ஆயிரத்துக்கும், மக்காச்சோளம், 10 மூட்டைகள் வரத்தாகி, 19 ஆயிரத்துக்கும், எள், 15 மூட்டை வரத்தாகி, 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 3.82 லட்சம் ரூபாய்க்கு, வேளாண் பொருட்கள் விற்பனையாகின.
15 காப்பர் வால்வு திருட்டு
காங்கேயம், டிச. 7-
காங்கேயம் தாலுகா பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலமும், கிராம பகுதியில் ஆங்காங்கே போடப்பட்டிருந்த போர்வெல் மூலமும் தண்ணீர் எடுத்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பாலசமுத்திரம்புதுார் ஊராட்சி மற்றும் தம்மரொட்டிபாளையம் ஊராட்சி பகுதியில் குடிநீர் குழாயில் நுாற்றுக்கு மேற்பட்ட காப்பர் வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தண்ணீர் அடைத்தும், திறந்து விடப்பட்டு வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு, 15 காப்பர் வால்வுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் இறப்பு குறித்து
போலீசார் விசாரணை
கோபி, டிச. 7-
கோபி அருகே, காசிபாளையத்தை சேர்ந்தவர் சரஸ்வதி, 52; இவர் அதே பகுதியில் உள்ள சாலையில், நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு நடந்து சென்றார். அப்போது திடீரென உடல்நிலை சரியில்லாததால், சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு சரஸ்வதி அழைத்து செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே சரஸ்வதி உயிரிழந்தார். இதுகுறித்து அவரின் மகள் மனோன்மணி, 38, கொடுத்த புகார்படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
அ.தி.மு.க., பன்னீர் அணி
நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பு
ஈரோடு, டிச. 7-
அ.தி.மு.க.,வில் பன்னீர்செல்வம் அணிக்கான, ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் பட்டியலை அறிவித்துள்ளார்.
ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., பன்னீர் அணி செயலாளராக முருகானந்தம் உள்ளிட்ட சில நிர்வாகிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிவிப்பில் கூறியதாவது:
ஈரோடு மாநகர் மாவட்ட அவைத்தலைவர் அபிநயா முத்துசாமி, மாவட்ட இணை செயலாளர் நீலாவதி, பொருளாளர் முருகேசன், பொது குழு உறுப்பினர்கள் முரளிதரன், சிவமுருகன், பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் ராஜ்குமார், வீரப்பன்சத்திரம் ஜெயராமன், கருங்கல்பாளையம் அர்த்தநாரீஸ்வரன், சூரம்பட்டி சசிகலா பெருமாள், அசோகபுரம் ஜோதிமணி உட்பட பல்வேறு நிர்வாகிகள் பெயர் இடம் பெற்றுள்ளன.
காங்கேயத்தில் இன்று
மின் குறைதீர் கூட்டம்
காங்கேயம், டிச. 7-
காங்கேயம் கோட்டத்தில், மாதாந்திர மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், இனறு, காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சென்னிமலை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் காலை, 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை, மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது. மின் பயனீட்டாளர்கள் கலந்து கொண்டு, தங்களின் குறைகளை தெரிவித்து, நிவர்த்தி பெறலாம் என, மின் வாரிய காங்கேயம் செயற்பொறியாளர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
ரூ.1.08 லட்சத்துக்கு
தேங்காய் வர்த்தகம்
சென்னிமலை, டிச. 7-
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அடுத்துள்ள, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 8,703 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். குறைந்தபட்சமாக, ஒரு கிலோ, 23.75 ரூபாய்க்கும், அதிகபட்சமாக, 34.59 ரூபாய்க்கும், சராசரியாக, 28.89 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 3,993 கிலோ எடையுள்ள தேங்காய்கள், ஒரு லட்சத்து, 8,045 ரூபாய்க்கு வர்த்தகமானது.
மறியல் செய்த
இ.ம.க.,வினர் கைது
தாராபுரம், டிச. 7-
தாராபுரத்தில், சாலை மறியலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினரை, போலீசார் கைது செய்தனர். கும்பகோணத்தில், காவி நிற ஆடையில் அம்பேத்கரை சித்தரித்ததாக கூறி, இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தியை, போலீசார் நேற்று கைது செய்து சிறையிலடைத்தனர். இதை கண்டித்து, தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே, நேற்று மாலை, 5:00 மணியளவில், இந்து மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் கண்டியப்பன், சங்கர், மதிவதனி ஆகியோர் தலைமையில், அக்கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த தாராபுரம் போலீசார், மறியலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர், 15 பேரை கைது செய்தனர்.
அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு
தாராபுரம், டிச. 7-
தாராபுரத்தில், அம்பேத்கரின் நினைவு நாள், நேற்று அனுசரிக்கப்பட்டது.
தாராபுரம், பழைய நகராட்சி அலுவலகம் முன், நேற்று காலை, 11:00 மணியளவில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்முத்து தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கர் உருவப்படத்திற்கு, அக்கட்சி நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செய்தனர். இதேபோல், தாராபுரம் வடதாரை பகுதியில், பா.ஜ., சார்பில் நகர தலைவர் சதீஷ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், அம்பேத்கர் உருவப்படத்திற்கு, திரளானோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
போக்சோவில்