ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில் கடந்த நிதியாண்டில், 329 பணிகள், 3.5 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதில், 60 பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள பணிகள் வரும் மார்ச் மாதத்துக்குள் முழுமையாக முடிக்க, ஊரக வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த நிதியாண்டில் சுற்றுச்சுவர் கட்டுதல், கழிப்பிடங்கள் கட்டுதல், குடிநீர் வசதி செய்தல், வடிகால் வசதி அமைத்தல் போன்ற பணிகள், 3.50 கோடி ரூபாய் மதிப்பில், 329 பணிகளாக மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதில், 60 பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளை விரைவாக செய்து, மார்ச் மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், 262 பணிகள், 4.63 கோடி ரூபாயில் மேற்கொள்ள முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் நிர்வாக அனுமதி பெறப்பட்டு, நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் பணிகள் துவங்கும்.
இவ்வாறு கூறினர்.